இறந்த பின்னரும் வாக்கு சீட்டில் இடம்பெற்று வென்று சாதனை படைத்த பெண்
எங்களது தாயை 4 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச் செய்தீர்கள். இறந்த பிறகும் அவரை வெற்றி பெறச் செய்து அவருக்கு பெருமை தேடி தாருங்கள் என்று பிரசாரத்தின் போது அவர்கள் உருக்கமாக பேசினார்கள். இந்நிலையில், மகள்களின் பிரசாரத்துக்கு தேர்தலில் நல்ல பலன் கிடைத்துள்ளது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி 92,108 ஓட்டுகள் பெற்று, சுமார் 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தெலுங்கு தேச வேட்பாளர் பிரபாகர்ராவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்று சாதனை படைத்த பெண் என்ற பெருமையை ஷோபா நாகிரெட்டி பெற்றுள்ளார். மேலும், ஷோபா நாகி ரெட்டி வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி 6 மாதத்துக்குள் அள்ளகட்டா தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. |