புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கிராம மக்கள் 
news
நைஜீரியாவில் கடந்த மாதம் பாடசாலை  மாணவர்களை கடத்தி சென்ற ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் குழுவை சேர்ந்த 200 தீவரவாதிகளை வடகிழக்கு நைஜீரியா பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து வெட்டிச் சரித்துள்ளனர்.
 
நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகிழக்கு நைஜீரியாவில் கலாபல்ஜ் மாவட்டத்தில் மெனாரி, சான்கயாரி, கராவா ஆகிய 3 கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர். வீடுகளில், புகுந்து மக்களை தாக்க முயன்றனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கொதித்து எழுந்தனர். வீட்டில் இருந்த அரிவாள், கத்தி, தடி, கற்கள் போன்ற ஆயுதங்களால் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்கினர். அவர்களை அடித்தும், வெட்டியும் கொன்றனர். கிராம மக்களின் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
மக்கள் துணிந்து களம் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் எஞ்சியவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடி விட்டனர்.
 
இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூற நைஜீரியா அதிபர் குட்லக் ஜோனாதன் முடிவு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad