புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

தேவேகவுடா வெற்றி: குமாரசாமி தோல்வி
ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் 5–வது தடவையாக தேவேகவுடா வெற்றி பெற்றார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும்,
முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சு, பா.ஜனதா சார்பில் விஜயசங்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஹாசன் தொகுதியில் 5 லட்சத்து 9 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று தேவேகவுடா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுவுக்கு 4 லட்சத்து 9 ஆயிரத்து 379 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் விஜயசங்கருக்கு 1 லட்சத்து 65 ஆயிரத்து 688 வாக்குகளும் கிடைத்தன.
ஹாசன் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு ஏற்கனவே தேவேகவுடா 4 தடவை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அத்துடன் சேர்த்து 5–வது தடவையாக அந்த தொகுதியில் தேவேகவுடா வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்பள்ளாப்பூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்–மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி, ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி, பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி பச்சே கவுடா உள்பட 18 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் வீரப்பமொய்லி 4,24,800 ஓட்டுகளை பெற்று வெற்றி மாலை சூடினார். ஏற்கனவே இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரப்பமொய்லி தற்போது 2–வது முறையாக எம்.பி. ஆக தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், இதுவரை எந்த தேர்தலிலும் தோல்வியே தழுவாத குமாரசாமி 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 3,46,339 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ad

ad