புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி 
news
 கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்
இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
 
2009ம் ஆண்டு இறுதி போரின் போது கொல்லப்பட்ட எமது தமிழ் மக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது துக்கம் அனுஸ்டிக்கவோ கூடாது என அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதும் அவ்வாறு ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளமையும் மீண்டும் தமிழ் மக்களின் உரிமைகள் மீது அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடும் நிகழ்வாகவே அமைகின்றது.
 
இலங்கை அரசியல் யாப்பில் இல்லாத ஒரு புதிய சட்டமே இறந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்பதாகும்.
 
இவைகளையும் சர்வதேசம் கண்ணூடாக கண்டு கொள்ளட்டும். அத்தோடு நடு நிலமை வகித்த இந்தியாவும் இனியாவது விழிப்படையட்டும்.
 
மேலும் மக்கள் பொது இடங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் மக்கள் மனமுவந்து தமது வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad