புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

க .செல்வரத்தினம் ஆசிரியர்



கலைஞர் செல்வம் .க .செல்வரத்தினம் ஆசிரியர்
___________________________________________________
புங்குடுதீவில் ஆரம்ப கால நாடக துறையை ஆராய்ச்சி செய்ய புறப்பட்டால் நிச்சயமாக நாடகக் காவலர்களாக இருவரை சிகரமிட வேண்டும் .அவர்கள் சிவசாமி ஆசிரியர் அவர்களும் செல்வரத்தினம் ஆசிரியர்களும் ஆவார்கள். 

புங்குடுதீவு இருபிட்டி கிராமத்தில்கனகசபை நாகம்மா தம்பதிக்கு  பிறந்த இந்த பெருமகன் ஆரம்பக் கலவியை புன்குடுதேவிலும் உயர்கல்வியை சாவகச்சேரி ட்ரிபேக் கல்லூரியிலும் கற்றுத் தேறினார் .இந்தக் காலத்தில் இவர் முதலாவது சாதனை படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து எம்மண்ணின் பெருமையை முழு இலங்கையும் அறிய வைத்தார் .ஆம் ஆண்டில் அந்த பெருமையான நிகழ்வு நடைபெற்றது .அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த இளைஞனின் பேச்சு வானொலியில் ஒலி பரப்பானது .கல்வியை முடித்து கொண்டவர் ஆசிரயர் பதவியை பெரும் வரையில் புங்குடுதீவு மண்ணில் பல துறைகளில் முழுமையாக ஈடுபடுத்த தொடங்கினார் .அதன் பலனாக தன்னை ஒத்த வயது இளைஞர்களை ஒன்று திரட்டி நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கலை கலாசார சமய பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.அதன் பலனாக சிறந்த நாடகத்துறை இலக்கியத்துறை பரிமாணங்களை மண்ணிலே வளர்க்கப் புறப்பட்டார்.கிரமாங்களின் சமூக விழிப்பு ணர்வு ,எழுச்சி ,மாற்றம் ,புதுமை என்று காணும் வழி நோக்கி தனது நாடக கலை திறனை பயன்படுத்தினார்.அந்த முயற்சியில் பல நாடகங்களை எழுதி இயக்கி தானும் நடித்து புதிய பாதையை உருவாக்கி கொடுத்தார்.புங்குடுதீவு மட்டுமல்ல்ல யாழ்ப்பாணம் கொழும்பு சாவகச்சேரி வன்னி போன்ற பகுதிகளிலும் இந்த நாடகப் புரட்சியை செவ்வனே செய்தார்.முன்னாள் பாரளுமற்ற உறுப்பினரும் சாதி ஒழிப்பு அ     வழிப்போராட்ட விற்பன்னரான வீ.என்.நவரத்தினம் அவர்களும்இவரது நாடகத்தில் நடித்திருந்தார்.அந்த நாடக விழாவில் பங்கு பற்றிய தந்தை செல்வா அவர்கள் இவரின் திறமையை கண்டு வியந்து கலைஞர் செல்வம் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்தார் . 
உரிய காலத்தில்  புங்குடுதீவு கிழக்கு பதினோராம் வட்டாரத்தில் திருமண பந்தத்தில் தன்னை இனைத்துக்  கொண்டார் .நான்கு பெண்பிள்ளைகளையும் இரு ஆண்மகனையும் குடும்பத்தில் கொண்ட இவர் இவர்களை நல்ல கல்வி சமூக சேவை ஈடுபாட்டோடு வளர்த்தெடுத்து புகலிடம் நோக்கி வாழ்வை அமைத்துக்  கொடுத்திருந்தார்.இவரது புத்திரன் செல்வரத்தினம் சுரேஷ் அவர்கள் இவரது வழியிலே ஆன்மிகம் கலை இசை இலக்கியம் பொதுப்பணி என்று எல்லாத்துறையிலும் சிறப்பாக விளங்கி வருகிறார்.இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.இவரது சகோதரரான அரியரத்தினம் தாயகத்தில் ஆசிரியராகவும் வட்டார கல்வி அதிகாரியாகவும் பனி புரிந்து பிரான்சில் புகலிடம் கண்டு கலை இலக்கிய சமய ஊருக்கான தொண்டு என சிறப்புற்றுள்ளார் .இவரது தங்கை திருமதி பூங்கோதை அவர்களும் இவர்களுக்கு நிகராகவே கலை இலக்கியம் நாடகம் பொதுப்பணி என சிறந்தோங்கி கனடாவில் வாழ்கிறார் .இவர்கள் மூவருமே புங்குடுதீவு மண்ணின் உலக அமைப்புகளில் முன்னணி பங்கினை ஆற்றுவதும் குறிப்பிடத்தக்கது 
செல்வரத்தினம் அவர்கள் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் காலத்தில் தனது மாணவர்களை தமிழ் இலக்கியம் கலை நாடகம் என எல்லாத் துறைகளிலும்  ஊக்குவித்து பல போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகளை பெற காரணமாக இருந்தார் . புங்குடுதீவு மண்ணில் பல சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி இயக்கி நடித்து புரட்சிகர மற்றதை கிராமத்திலே உருவாக்கிய பெருமை கொண்டவர் .இவரது நாடகங்களில்  எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய அரங்கியல் யுக்திகள் உருவாகியிருந்தன .எமது பண்டைத் தமிழரின் அறிய கலையான சாஸ்திரக் கலைய கூட ஐயம்திரிபற கற்று தேறி இருந்தார் . ஆங்கிலத்தில் சிறந்த புலமை கொண்ட இந்த இலக்கிய வாதி புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக தொடங்கி அங்கேயே அதிபராகி உயர்ந்தார் . மாங்குளம் மக வித்தியாலயத்தில் கடமை புரிந்த காலத்தில் அந்த பகுதி மக்களிடையேயும் தனது கைவந்த கலைகளான இலக்கிய நாடகத்துறையை புகுத்தி அந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திய பெருமை பெற்றவர் ஒட்டு மொத்தமாக தமிழ் இலக்கியம் கலை நாடகம் பேச்சாற்றல் சாஸ்திரம் ஆங்கில புலமை சமய பண்ணி என அனைத்து துறை விற்பன்னராக வாழ்ந்து குறைந்த ஆயுளிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.இவரது இயக்கத்தில் உருவான பிணம் பேசுகிறது என்ற நாடகம் மிகவும் பிரசித்தாமானது. புங்குடுதீவு மண் இவரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .

ad

ad