17 மே, 2014

வடமாகாணசபை முன்றலில் தீபம் ஏற்றினர் சிவாஜிலிங்கமும்அனந்தியும் 
வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில
வினாடிகளினில் காலால் மிதித்து அணைத்தனர் இலங்கைப்பொலிஸார். அறிவிக்கப்பட்ட படி வடமாகாணசபையின் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வடமாகாணசபையினுள் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த உள்ளே செல்ல முற்பட்டனர். எனினும் அதனை தடுக்கும் வகையினில் பிரதான நுழைவாயில்கள் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.எனினும் தாம் மாகாணசபை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தி அவர்கள் உள்ளே செல்ல முற்பட்டனர்.அதற்கும் அனுமதி வழங்கப்படாது இன்று மாகாணசபைக்கு விடுமுறையென தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர்.
இந்நிலையினில் தம்மால் எடுத்துவரப்பட்ட சுடரினை பேரவைக்கு முன்னதாக சிவாஜிலிங்கம் ஏற்ற முற்பட்டார்.எனினும் சுடரை ஏற்றிய சில வினாடிகளினில் அங்கு பாய்ந்து வந்த பொலிஸ் உயரதிகாரியொருவரை அதனை தள்ளிவீழ்த்தி கால்களினால் மிதித்தார்.அவருடன் இணைந்து ஏனைய பொலிஸாரும் தீபத்தை கால்களால் மிதித்து அணைத்தனர்