புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014


தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
10தொகுதியில்  தேமுதிக.பாமக 3 , மதிமுக 2

தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில் பா.ஜனதா கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க.
தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது.
இதில் கூட்டணிக்கு தலைமை தாங்கி அதிகபட்சமாக 14 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், மதுரை, நெல்லை ஆகிய 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
பாமக 3 தொகுதியிலும், மதிமுக 2 தொகுதியிலும் டெபாசிட் இழந்தது
தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில் பா.ஜனதா கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 37 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது.
பா.ம.க. 8 தொகுதியில் போட்டியிட்டு தர்மபுரியில் வெற்றி பெற்றது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுவை ஆகிய 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
ம.தி.மு.க. 7 தொகுதியில் போட்டியிட்டது. இதில் தேனி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது.
பெரம்பலுரில் போட்டியிட்ட ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து 2,38,887 வாக்குகள் வெற்று 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் சுமார் இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்றார். இதன்மூலம், தமது டெபாசிட் தொகையை அவர் தக்கவைத்தார். 
மற்ற 38 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். ஒரு வேட்பாளர் தாம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமெனில், மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கு அதிகமான வாக்குகள் பெற வேண்டும். தமிகத்தில் சுமார் 4 புள்ளி 4 சதவீத வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது
பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் 2,75,356 வாக்குகள் பெற்று 2–வது இடத்தை பிடித்துள்ளார்.

ad

ad