புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

எனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்றது: மன்மோகன் சிங் உரை
 


பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள பிரதமர் மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு பிரிவு உபச்சார உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியா தற்போது வலுவாக உள்ளது. இந்தியாவில் வளர்ச்சிக்கான காரணிகள் பெரும் அளவில் உள்ளது. எனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்றது. மத்தியில் புதிதாக அமையும் அரசுக்கு வாழ்த்துக்கள். 
நான் எனது பணியை திறமையுடன் சிறப்பாக செய்துள்ளேன்; இப்போது பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது; எனதருமை நாட்டு மக்களே, நாங்கள் உங்கள் தீர்ப்பை மனித நேரத்துடன் ஏற்றுக் கொள்கிறோம்; மக்களின் முடிவை நான் மதிக்கிறேன்; கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் பல சாதனைகளை புரிந்துள்ளோம்;

இந்த நாட்டின் குழந்தையாக பிறந்து உயர்ந்த பதவியை அடைந்ததற்காகவும், நாட்டிற்காக எனது பங்கிளிப்பை தந்தததற்காகவும் பெருமை கொள்கிறேன்; இந்தியா பொருளாதார துறையில் உயர்ந்த நிலையை அடையும் என உறுதி அளிக்கிறேன்; இதை தவிர நான் எதையும் கேட்கவில்லை; அடுத்து வரும் அரசு வெற்றிகரமாக செயல்பட நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்;பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் உங்களின் அன்பை நான் எப்போதும் மறக்க மாட்டேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.


ad

ad