வாக்கு எண்ணும் முன் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளில் தொகுப்பு
தமிழக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ,பா.ஜ.க. கூட்டணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தமுள்ள 39 தொகுதிகளில்
844 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 178 பேர் கோடீஸ்வரர்கள். 103 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் 37 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெருங்கட்சியாக நிரூபித்துள்ளது அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் பா.ஜ.க., பா.ம.க.வுக்கு தலா 1 தொகுதிகள் கிடைத்துள்ளன. வாக்குகள் எண்ணப்பட்ட நாளின்போதும் அதற்கு முதல்நாளும் பிரதான கட்சிகளைச் சுற்றி நடந்த சுவாரஸ்யங்கள் "ரிசல்ட் டைரி'யாக இங்கு அணி வகுக்கின்றன.
திருவண்ணாமலை
தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை, நெருக்க மான நண்பர்களிடம், ""என்னைத் தோற்கடிச்சுட் டாங்க. நான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க. 200 ரூவா குடுத்திருக்காங்க. இங்க 50 ரூவா குடுத்திருக்கு. பணம் குடுக்காம இருந்தா கூட பரவாயில்லை. இப்படி பணம் குடுத்து தோற்கடிச்சுட்டாங்க''’என வருவோர் போவோரிடம் எல்லாம் புலம்பிக்கொண்டு இருந்தார்.
கவுண்ட்டிங்கிற்கு முன்பு அ.தி.மு.க. வேட்பாளர் வனரோஜா, தொண்டனுக்கு இருக்கும் உணர்வுகூட இல்லாமல், எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தார். ஆனால், மா.செ.வும் தொகுதிப் பொறுப்பாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியோ, என்ன நடக்குமோ என கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருந்தார். "வனரோஜா ஜெயிச்சாதான் பழையபடி நான் மந்திரியா வலம்வர முடியும்'’என ஆதரவாளர் களையும் உசுப்பிவிட்டு, பதற்றத்திலேயே இருக்க வைத்தார்.
பா.ம.க. எதிரொலி மணியன், வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் பல முக்கிய ஊர்களுக்குச் சென்றபடி இருந்தவர். ""நம்ம ஜாதி ஓட்டு வாங்கியிருக்கோம், ஜெயிக்க வாய்ப்பில்லை. இதையும் மீறி ஜெயிச்சா அப்புறம் பாத்துக்க லாம்''’என யதார்த்தமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
-ராஜா
கள்ளக்குறிச்சி
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, தொகுதிப் பொறுப்பாளர் அமைச்சர் மோகன்,""குடுத்த பணத்தை செலவு பண்ணியிருக்கோம். தலைமை சொன்ன வழிகாட்டுதலை முறையா, சரியா செஞ்சிருக்கோம். வெற்றி நமக்கு தான்யா''’என கட்சிக்காரர்களிடம் ரொம்பவுமே உறுதிபடப் பேசினார். வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளே, ஆறு சட்டமன்றத் தொகுதி களைச் சேர்ந்த முகவர்களை கள்ளக்குறிச்சிக்கு வரவழைத்து, பாதுகாப்பாக தங்க வைத்தார் பத்திரமாக ஏ.கே.டி. பொறியியல் கல்லூரியில். தி.மு.க.காரங்க தோல்வி பயத்துல கலாட்டா செய்வாங்க''’என கட்சியினரிடம் எச்சரிக்கை விடுப்பதைப் போல கூறினார்.
ஊடகங்களில் வந்த கருத்துக்கணிப்புகள் கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்த, பிரபல மவுண்ட் பார்க் பள்ளியின் அதிபரிடம், பணியாளர்கள் கேட்டனர். அதற்கு, "ஐம்பதாயிரம் ஓட்டு. எந்தக் கணிப்பும் என் வெற்றியைத் தடுக்காது'ன்னு தி.மு.க. மணிமாறன் நண்பர்களிடம் நம்பிக்கையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
-எஸ்.பி.சேகர்
தஞ்சாவூர்
வாக்கு எண்ணிக் கைக்கு முந்தைய நாள் மாலையில், தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு, அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள நிர்வாகிகளை அழைத்தார். பட்டுக்கோட்டை நிர்வாகி ஒருவரிடம் பாலு பேசும்போது, ""உங்க சாவடியில் 2,500 வாக்குகள் பதிவாகியிருக்கு. 1,200 -ல் இருந்து 1,500வரை நமக்குக் கிடைக்கும். ரெண்டாவது அ.தி.மு.க. வரும். மூணாவது பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடனே (அதாவது வெற்றிக்குப் பிறகு), தலைவரைப் பார்த்து வாழ்த்துப் பெற கிளம்ப வேண்டியிருக்கும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும்போதே மாற்று உடையோடு வந்திடுங்க''என முன்னேற்பாடுகளில் ரொம்பவுமே தயாராக இருந்தார்.
அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர் வைத்திலிங்கமோ, ""இதுவரைக்கும் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்போம்ன்னு நினைச்சோம். பாலு வச்சிருக்கிற கணக்கைப் பார்த்தா, முப்பதாயிரம் ஓட்டுல ஜெயிச்சாக்கூட போதும். கடைசி நேரத்துல ஏதாவது பண்ண வேண்டியிருக்கும்; எல்லாரும் வந்திருங்க''’எனச் சொல்லியிருக்கிறார். மேலும், “""ஓட்டுப் போடுற அன்னைக்கே திமுக செல்வாக்கா இருக்கும் ஊருகள்ல பாலுவைக் கதிகலங்க வச்சோம். ஓட்டு எண்ணுறப்ப இருக்கு''’என்றும் சொல்லியிருக்கிறார்.
கொலைவழக்கில் சிறைசென்று வந்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிக்கோட்டை பொய்யாமொழி தலைமையில், தஞ்சாவூரில் பல லாட்ஜுகளில் 400 பேரைத் தங்கவைத்தது, பாலுவின் தரப்பு. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வைத்தியின் ஆசியோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படை, பரிவாரங்களோடு தயாராக வைத்திருந்தனர்.
-பகத்
நாகப்பட்டினம்
""15 கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கோம். ஏ.கே.எஸ் விஜயன் எம்.பி. மேல உள்ள கோபம் எல்லாத்தயும் கூட்டினா நாம சர்வ சாதாரணமா ஜெயிச்சிடுவோம்'' என தினசரி கூட்டல் கணக்கைப் போட்டபடியே இருந்தார், நாகை தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சரு மான காமராஜ்.
கடந்த 14-ஆம் தேதியன்று கட்சி நிர்வாகிகளை திருவாரூருக்கு அழைத்த அமைச்சர் காமராஜ், அவரவர் பகுதில எவ்வளவு ஓட்டு கிடைக்கும்னு ஒவ்வொருவராக கேட்டு, கூட்டிப் பார்த்தார். ""நீங்க சொல்றதைப் பார்த்தா இரண்டே முக்கா லட்சம் ஓட்டு லீடிங் வருது. பின்ன எப்படிய்யா எல்லா பத்திரிகையுலயும் நாம தோத்துடுவோம்னு சொல்றாங்க? எப்படியோ இரண்டரை லட்சம் ஓட்டு போனாலும் 25,000 ஓட்டு வித்தியாசத்துலயாவது ஜெயிச்சிடு வோம்ல''’என தயக்கத்துடனேயே பேசியிருக் கிறார். இது சரிதானா என மூன்று கோயில் களுக்குச் சென்று குறி கேட்டும் வந்தார்.
தி.மு.க. விஜயனோ, ""வேதாரண்யம் தொகுதியும், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியும் நமக்கு எப்பவுமே ஓட்டு லீடிங் கிடைக்கும். திருவாரூர் தொகுதியை பொறுத்த வரை நம்மள அ.தி.மு.க.காரவுங்க மிஞ்ச முடியாது. இருந்தாலும் நன்னிலமும், நாகப்பட்டினத்தையும் நினைச்சாதான் பயமா இருக்கு. அதில்லாம நம்ம ஆளுங்களே காசு கொடுக்கலைன்னு வருத்தப்பட்டிருக்காங்க. என்ன ஆகப் போவுதோ தெரியல'' என்று உள்ளத்தில் பயத்தோடும் உதட்டளவில் சிரிப்போடும் நாகை நகரப் பிரமுகர் ஒருவரிடம் பேசியிருக்கிறார்.
-செல்வகுமார்
சேலம்
""ஜெயிச்சு எம்.பி.யாகி மத்திய அமைச்சராகப் போறீங்க'' 15-ஆம் தேதி இரவு, அமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் ஒரு நிர்வாகி இலை பன்னீர்செல்வத்திடம் சொல்ல... ""முதல்ல ஜெயிச்சா போதும்...'' சீரியஸாகவே பயத்தைக் காட்டினார் பன்னீர்செல்வம்.
""எம்.பி., மந்திரி... என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு கேப்டனின் மைத்துனர் சுதீசுக்கு சேலத்தில் வீடு பார்த்துக் கொண் டிருந்தனர் சேலம் வடக்கு எம்.எல்.ஏ. மோகன் ராஜும், மேட்டூர் எம்.எல்.ஏ. பார்த்திபனும். மே 15 அன்று சேலம் வந்த சுதீஷ், ""தேர்தல் ஆணையம் அறிவிச்சா... நீங்க எப்படி மறுவாக்குப் பதிவுக்கு அலவ் பண்ணுனீங்க?'' தே.மு.தி.க.வினரை வறுத்து எடுத்துவிட்டார். அழகாபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த முரசு நிர்வாகி ஒருவர், ""தேர்தல் ஆணையம் நம்மகிட்ட பர்மிஷன் வாங்கணுமாம். நல்ல கொடுமைடா சாமி'' தன் தலையில் கொட்டிக் கொண்டார்.
""ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க. அம்மா... டி.வி.யையும் ஆஃப் பண்ணிக்கிட்டு ரூமுக்குள்ள உட்கார்ந்திருக்காங்க. பாட்டி ஏன் இப்படி இருக்காங்க? பெயிலாயிட்டாங்களா? என்று என் குழந்தைங்கள் ரெண்டுபேரும் தேம்பித் தேம்பி அழறாங்க. நான் யாரை சமாதானப்படுத்த... வீட்டுக்கு வந்தவர்களிடம் தன் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறார் தி.மு.க. உமாராணியின் மகள் சுனிதா.
-சே.த.இளங்கோவன்
தருமபுரி
15-05-14 முழுநாளும் தர்மபுரியில் பார்ட்டி ஆபீஸில் உட்கார்ந்து ஒ.செ.க்களுடன் பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர் பழனியப்பன். கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.
இளைஞர் பாசறையினர் 300 பேருக்கு தர்மபுரி ரமோபார்டு, எம்.ஜி.ஆர். லாட்ஜ், தகடூர் லாட்ஜில் ரூம் போட்டுக் கொடுத்தார். "இவங்க சாப்பாட்டை கவனிங்க' என்று தலா 10 ஆயிரத்தை ஒ.செ.க்களிடம் கொடுத்தார். "சாதிப் பற்று தர்மபுரியை ஆட்டிப்படைச்சிருச்சே' என்று புலம்பினார்.
""இந்தாங்க... கவுண்ட்டிங் நடக்கிறதை அப்பப்ப சொல்லுங்க'' என்று நிருபர் ஒருவ ரிடம் புத்தம் புதிய செல்போன் ஒன்றை கொடுத்த அமைச்சர் பழனியப்பன் ""யாராவது ஒரு டி.வி.யை கொண்டாந்து கட்சி ஆபீஸ்ல வைக்கச் சொல்லுங்க'' என்றார். தர்மபுரி அ.தி.மு.க. அலுவலகம் களையிழந்து நின்றது.
-எம்.வடிவேல்
தென்சென்னை
தி.மு.க. தரப்போ, ""வெற்றி தோல்வி சகஜம். அதனால், ஏஜெண்டுகளாக நியமிக்கப்படு கிறவர்கள் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும்வரை வாக்கு மையத்திலேயே இருக்க வேண்டும். தி.மு.க. பின்தங்கினால் வெக்ஸ் ஆகி யாரும் மையத்தை விட்டு வெளியேறிவிடக்கூடாது'' என்று அறிவுறுத்தியது. தென்சென்னையின் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்பட்டன. வாக்கு மையத்தில் யார் யார் இருக்க வேண்டும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் மிக ஸ்ட்ரிக்ட்டாகவே இருந்தனர். வேட்பாளர்களான அ.தி.மு.க. ஜெயவர்த்தன், தி.மு.க. டி.கே.எஸ். இளங்கோவன், பா.ஜ.க. இல.கணேசன் ஆகியோர் காலை 6 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் இளங்கோவனும் இல.கணேசனும் அருகருகே உட்கார்ந்திருக்க, அ.தி.மு.க. ஜெயவர்த்தனோ சற்று தள்ளியே உட்கார்ந்துகொண்டார். அருகருகே இருந்தாலும் யாரும் யாரிடமும் சுவாரஸ்யமாக பேசிக்கொள்ளவில்லை. இறுக்கமாகவே இருந்தனர். தபால் வாக்குகள் தொடங்கி ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க.வே முன்னிலையில் இருந்ததால், தி.மு.க., பா.ஜ.க. தொண்டர்கள் ஸ்பாட்டை விட்டு 11 மணிக்கெல்லாம் வெளியேறத் துவங்கிவிட்டனர். முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் மகன் எம்.பி.யாகிவிட்டார்.
-இளையசெல்வன்
ஸ்ரீபெரும்புதூர்
-இளையர்
கடலூர்
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, முன்னாள் ச.ம.உ. அ.தி.மு.க.வின் அய்யப்பன் வந்தார். அ.தி.மு.க.வின் முகவரிடம், "முன்னே போய்யா' என கோபமாகச் சொல்ல... தி.மு.க. வேட் பாளரின் முகவர் பால முருகனும் அவரின் ஆட்களிடம் இதேபோலச் சொன்னார். உடனே அய்யப்பன், "இவங்க என்ன மோ ஜெயிக்கிறதப் போல சொல்றாரு'’என கிண்டல் செய்துகொண்டே, அ.தி.மு.க.வினரை முன்னாள் உட்கார வைத்தார்.
எண்ணிக்கைக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாக கட்சியினரிடம் பேசிய அமைச்சர் சம்பத், ""நாம குடுத்த பணம் சரியாப் போய்ச் சேர்ந்திருந்தா, அதிக லீடிங்கில ஜெயிப்போம். இல்லைனா, கொஞ்சம் கஷ்டம்தான்''’என வாட்டத்துடனேயே இருந்தார். ஆனால், 15-ஆம் தேதி மதியம் கடலூருக்கு வந்த சம்பத், மூர்த்தி கபே எனும் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து வைத்தார்.
தி.மு.க. தரப்பில், ஒரு வாரத்துக்கு முன்பு, மா.செ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் வேட்பாளர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணனும் நிர்வாகிகளுடன் குறிஞ்சிப்பாடியில் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வேட்பாளரிடம் பன்னீர்செல்வம், ""குறிஞ்சிப் பாடி தொகுதியில் இங்க ரொம்ப எதிர்பார்க் காதே. கூடுதலும் வராது குறைவும் வராது'' என்றார். வெளியில் வந்த வேட்பாளரோ, ""மா.செ. தன் தொகுதியில் இப்படி என்கிறார். ஆனால், எனக்காக ஓட்டு வரும்''’என கடைசிவரை நம்பிக்கையோடவே இருந்தார்.
-காசி
மதுரை
அ.தி.மு.க.வின் கோட்டையாக திகழும் மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனே வெற்றி பெற்றிருக்கிறார்.
-முகில்
கன்னியாகுமரி
அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண் தங்கம் “""என்னைக் காப்பாற்ற யேசுவால்தான் முடியும்''’என்று தனக்கு நெருக்கமான கிறிஸ்தவர் போதகர்களிடம் ப்ரேயர் பண்ணச் சொன்னார். ஆனால் அரசியலைக் காட்டிலும் மதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனே வெற்றி பெற்றிருக் கிறார்.
-மணிகண்டன்
கோவை
கோவைக்கு பிரச்சாரத்திற்கு வந்திருந்த தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. வேட்பாளர் கணேஷ் குமாரை கடிந்துகொண்டார். ""96 வயசில கலைஞர் பிரச்சாரம் செய்கிறார். நீங்க கொஞ்சமும் பொறுப்பில் லாம 110 டிகிரி வெய்யில்... பிரச்சாரத்திற்கு வெளிய போக முடியலைனு சொல் றீங்களே...'' என்று.
வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் ஈரோடு சென்று தன் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்த இலை ஏ.பி.நாகராஜன், ""திக்திக்குனுதான் இருக்குது. நாடோடி மன்னன் ரிலீசுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சொன்னாராம், "படம் ஓடினால் நான் மன்னன் இல்லைனா நாடோடி' என்று. அதுமாதிரிதான் என் நெலைமை. ஜெயிச்சா டில்லி, இல்லைனா கழனிப்பானையில விழுந்த பல்லிதான். என்னோட எல்லா நிலம் கரையும் அடமானம் வச்சாச்சு. வேற ஒண்ணுமில்லை. வீடுதான் இருக்கு. இதை வச்சுக்கிட்டு ஒரு 50 லட்சம் கொடுங்கன்னு பொள்ளாச்சி ஜெயராமன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், "அதுக்கு 50 லட்சம் எவன் கொடுப்பான்'னு கேட்டாரு. என் குலசாமியும் அம்மாவும் ரெட்டை இலையும்தான் என்னைக் காப்பாத் தணும்'' எல்லாரிடமும் இதையே சொன்னார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.
-அருள்குமார்
தேனி
-சக்திவேல்
திருச்சி
""சொந்தச் செல்வாக்கில், கொறஞ்சது ஒரு லட்சம் ஓட்டாவது வாங்குவாங்க எங்க அம்மா!'' அதிக எதிர்பார்ப்பில் லாமல், வாக்கு எண் ணிக்கையை வந்து பார்த்துவிட்டுப் போனார் கள் காங்கிரஸ் சாருபாலா தொண்டைமானின் மகனும் மகளும்.
""கவுன்சிலர் எலெக் ஷன்ல இதுவரை நான் தோல்வியை சந்திச்சதில்லை. அண்ணன் நேரு நிப்பாட்டினாங்க. அவங்க வலிமையில நான் ஜெயிப்பேன்... திருச்சியில் நடந்த கட்சி மாநாடு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.'' 16.5.14 காலை ஏழு மணி வரை தெம்போடு இருந்தார் தி.மு.க. அன்பழகன். ""வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மாவட்டம் நேரு ஒரு சீட்டு கூட வராதுன்னு சொன்னது உண்மையாயிருச்சே'' என்று வேதனைப்பட ஆரம்பித்தார்.
-ஜெ.டி.ஆர்.
ராமநாதபுரம்
-ஆதித்யா
ஈரோடு
சித்தேடு, போக்குவரத்துக் கழகக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையை பார்க்க வந்த தி.மு.க. வேட்பாளர் பவுத்திரவள்ளி நம்மிடம் ""தலைவரும் தளபதியும் போன்ல சொன்னாங்க. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்பட வேணாம். நல்லா வேலை செஞ் சிருக்கீங்கன்னு பாராட்டினாங்க. இதுவே எனக்கு கிடைச்ச பெரிய அங்கீகாரம்தானே'' சிரித்தபடி சொல்லிவிட்டுப் போனார்.
அ.தி.மு.க. செல்வகுமார சின்னையாவை ம.தி.மு.க. கணேசமூர்த்தியின் மோடி அலைப் பிரச்சாரம்தான் மிரட்டி விட்டிருந்தது. ""ரொம்ப மிரண்டு விட்டேன். ரிசல்ட் நமக்குச் சாதகமா வரணும்ல... மா.செ. கிட்டு சாமி பக்கபலமா இருந் தாரு... இருந்தென்ன... குடும்பத்தோடு சாமி கும்பிட்டுத்தான் ரிசல்ட்டுக்காக வந்தேன். எல்லாரும் ஜெயிச்சு நானும் ஜெயிச்சிட்டேன்!'' கண்களில் ஆனந்தக் கண் ணீர் கூடுகட்டியது செல்வகுமார சின்னையனுக்கு.
-ஜீவா
நீலகிரி
""50 ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோத்துவிடக் கூடாதுனு மெனக்கெட்டோம். ராசாவை ஜெயிப்பம்னு கனவுல கூட நெனைக்கலை. மலையுடன் மோதி ஜெயிச்சிட்டம்ல!'' இலை கோபாலகிருஷ்ணனின் குர லில் மிகப்பெரிய குதூகலம்.
15.5.14 மாலையில், மேட்டுப்பாளையத்தில் கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்த ஆ.ராசா, ""மேட்டுப்பாளையத்திலும் அவினாசியிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கணும்'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். 16 காலையில் ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை நடந்த சென்டருக்கு வந்த ராசா ""இப்படி ஒரு தீர்ப்பை நீலகிரி மக்கள் எனக்கு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இது எனக்கு பெரிய தோல்விதான்.!'' ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட ராசாவை கலங்கிய விழிகளோடு பார்த்தபடி நின்றார்கள் உடன்பிறப்புகள்.