புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஜன., 2015

நாமல் வருவார் ஒரு மணிநேரம் நில்லுங்கள்; மாணவர்களை காக்க வைத்த கல்வி நிறுவனம்


நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளுங்கள் என ஆரியகுளத்திலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நிர்வாகத்தினர் மாணவர்களை மறித்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ச வந்துள்ள நிலையில் குறித்த கல்வி நிலையத்திற்கு வருகைதரவிருந்தார். அந்தவேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இது குறித்த மேலும் தெரியவருகையில்,
 
இன்று மதியம் ஒரு மணிக்கு கல்வி நிறுவனத்திற்கு வருகைதருவார் என்று கூறி ஒரு மணித்தியாலம் வரை மாணவர்களை நிர்வாகத்தினர் மறித்து வைத்திருந்தனர்.
 
எனினும் ஒரு மணி ஆகியும் நாமல் ராஜபக்ச வருகைதராததால் விசனமடைந்த மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
இது குறித்து நிர்வாகத்திடம் உதயன் இணையத்தள செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது,
 
யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கும் நாமல் ராஜபக்ச எமது கல்வி நிறுவனத்திற்கு வரவுள்ளதாக எம்மிடம் அறிவிக்கப்பட்டது.
 
நாமும் அதற்கு அனுமதி தெரிவித்தோம். ஏனெனில் வெளிவாரி பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கு கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் எவற்றிலும் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.
 
இதனால் கல்வியைத் தொடரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்கள் தங்களுடைய பிரச்சினையை நேரடியாக நாமலிடம் கூறமுடியும் என்ற நல்லெண்ண அடிப்படையிலேயே மாணவர்களை நிறுத்தி வைத்திருந்தோம்.
 
ஆனால் நாங்கள் வற்புறுத்தி எந்தவொரு மாணவர்களையும் நிறுத்தி வைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 
 
இதேவேளை நாமல் சந்திப்புக்கு வருவார் என்று கூறி யாழில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் நிர்வாகம் கல்வி கற்கும் மாணவர்களை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
-