புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஜன., 2015

தேர்தலுக்கு பின்னர் நிரந்தர நியமனம்; உறுதியளித்தார் நாமல்


யாழ். மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் அனைவருக்கும் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். இதன்போது யாழ்.நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தொண்டராசிரியர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
 
அதன்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கியிருந்தார்.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களுக்கு கடந்த ஆண்டு நியமனம் வழங்கப்பட்டது.
 
எனினும் யாழ். மாவட்டத்தை சேர்ந்த தொண்டராசிரியர்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. இவ்வாறு நியமனம் வழங்காது உள்ள 235 பேரும் தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர்.
 
எனவே தங்களுக்கு நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் யாழ். மாவட்டத்திலுள்ள 235 பேருக்கும் நியமனம் வழங்கப்படும் என நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.