புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

சங்கா இரட்டைச் சதம் வலுவான நிலையில் இலங்கை சிங்கங்கள்



நியூசிலாந்துக்கு எதிரான இர ண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காராவின் இரட்டை சதத்துடன் இலங்கை வலுவான நிலையில் உள்ளது.

முதல் இனிங்சிற்காக பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 356 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்க ளையும் இழந்துள்ளது.

நியூசிலா ந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மா னித்தது.

இதன்படி முதலில் துடுப் பெடுத்தாடிய நியூசிலாந்து அணி க்கு கேன் வில்லியம்சன் அதிக பட்சமாக 69 ஓட்டங்களைப் பெற் றுக் கொடுத்தார்.

மேலும் மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வெளியேற முதலாம் நாளான நேற்று முன்தினம் அந்த அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெ ட்டுக்களையும் பறி கொடுத்தது.

இலங்கை சார்பில் அபாரமாக பந்து வீசிய நுவன் பிரதீப் 4 விக்கெ ட்டுக்களை சாய்த்தார்.

மேலும் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்க ளையும் தம்மிக்க பிரசாத் 2 விக் ;கெட்டுக்களையும் மத்யூஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்காரா 203 ஓட்டங்களை விளாசினார்.

மேலும் தினேஷ் சந்திமால் 67 ஓட்டங்களை குவிக்க, போட்டியின் இரண்டாம் நாளான நேற்று, 356 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந் ;தது.

இதன்படி இலங்கை 135 ஓட்ட ங்களால் முன்னிலை பெற்றது. பின்னர் தமது இரண்டாவது இ;னி ங்சினை துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்கள் எடுத்து 113  ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.

டாம் லதாம் (9) ரூதர் போர்;டு (12) அவுட்டாகாமல் இருந்தனர். இப் போட்டியின் சிறப்பம்சமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த இனிங்களில் 12,000 ஓட்டங்களை எடுத்து சங்கக்காரா புதிய சாதனையையும் புரிந்துள்ளார்.

டெஸ்ட் போட்டி களில் 12,000 ஓட்டங்களை எடுக் கும் ஐந்தாவது வீரர் இவராவார். தன்னுடைய 224 ஆவது இனிங்சில் அவர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள சச்சின் டெ
ண்டுல்கரும், ரிக்கி பொண்டிங்கும் தம்முடைய 247 ஆவது இனிங்சில் தான் 12,000 ஓட்டங்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர இந்தியாவின் ராகுல் டிராவிட்டும் தென் ஆபிரிக்காவின் ஜாக் காலிஸ்சும் 12,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.  
 

ad

ad