புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

வென்னப்புவ படுகொலை ; கைது செய்யப்பட்ட காவலாளி தற்கொலை


வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த வீட்டின் காவலாளி, மாஓயா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
 
கொலைகளை செய்வதற்காக தான் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் ஆயுதங்களை காண்பிப்பதற்கு பொலிஸார் அவரை அழைத்து சென்றபோதே அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 
(இரண்டாம் இணைப்பு)
வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் கடமையாற்றிய காவலாளியும் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் கலேவலயைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தாய், தந்தை மற்றும் அவர்களுடைய  மூன்று நாட்கள் சிசு மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை ஆகிய நால்வரும் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது வீட்டுத் தோட்டத்தில் குழியொன்றுக்குள் போட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டனர்.
 
வீட்டுக்காவலாளி, முதலாளியின் ஐந்து வயதான மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கே முழுக்குடும்பத்தையும் அவர், கொலைச்செய்திருப்பதாக  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
(முதலாம் இணைப்பு)
 வென்னப்புவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
அதே இடத்தைச் சேர்ந்த தொழிலதிபர் , வைத்தியரான அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் கை, கால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வென்னப்புவ பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad