புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

மகிந்தவின் மக்கள் சந்திப்புக்கு நீதிமன்றம்


ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகளுக்கு கடுவலை நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. னாதிபதியின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்
மகிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக் கூடாது என கடுவலை நீதவான் வசந்த ஜினதாச தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி, தேசிய ரூபவாஹினி, சுவர்ணவாஹினி மற்றும் தெரண ஆகிய தொலைக்காட்சிகளுக்கே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர்கள் உட்பட பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி அந்த நிகழ்ச்சிகளின் காணொளிகளை வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் அநீதி ஏற்படும் என கூறி நான்கு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
பதி்லளிக்க இடமளிக்காத வகையில் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பக்கசார்பாக அந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அதனை தடுத்து நிறுத்துமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்

ad

ad