புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

சென்னையில் பாட்டி, பேத்தியை கொன்று பணம், நகைகள் கொள்ளை



சென்னை அருகே பள்ளிக்கரணையில் வசித்து வந்த ராஜலட்சுமி என்ற மூதாட்டியையும், அவரது பேத்தியையும் கொலை செய்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

பள்ளிக்கரணை வி.ஜி.பி. சாந்தி காலனியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (86). இவரது பேத்தி அன்னபூரணி (36). ஒரு தனியார் நிறுவனத்தில் கேஷியராக அன்னபூரணி பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் வி.ஜி.பி. சாந்தி காலனியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 1-ஆம் தேதி செல்போன் மூலம் இருவரும் உறவினர்களிடம் பேசியுள்ளனர். அதன் பிறகு யாருக்கும் அவர்கள் அழைக்கவில்லை.

இந்த நிலையில் வீட்டில் போடப்படும் பால் பாக்கெட்டுகள் கடந்த சில நாள்களாக எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டு பக்கத்து வீடுகளுக்கு பால்காரர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அன்னபூரணியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது இவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

விசாரணையில் பின்பக்க கேட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே வந்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்து பணம், நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இருவரும் 4 அல்லது 5 நாள்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கலாம். அவர்கள் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இதனால் அவர்களை தலையணையால் மூச்சை அழுத்தி கொண்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அவர்கள் வீட்டுக்கு வேலையாட்கள் யாரும் வருவதாக தகவல் இல்லை. ஆனால் வீட்டைச் சுற்றியிருக்கும் செடிகளை வெட்டுவதற்காக மட்டும் ஒருவர் மாதமொரு முறை வந்து செல்வது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் பின்புறத்தில் கட்டடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. கட்டட பணியாளர்கள் அல்லது செடி வெட்டும் தொழிலாளி ஆகியோரில் யாரேனும் கொலை செய்து பணம், நகையை கொள்ளையடித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ad

ad