புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஜன., 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதவியைத் தக்கவைக்க விலைபோகிறது: கருணா


தமது பதவிகளை தக்கவைப்பதற்காகவும் தமது பைகளை நிரப்புவதற்காகவுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவு பணங்களைப் பெற்றுக்கொண்டே மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார்.
வடக்கில் மீள்குடியேற்றம் சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மிகவும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நம்மது குழந்தைகள் கல்வியில் சாதனை படைக்கின்றனர்.
நாங்கள் எமது மாவட்டம், எமது குடும்பம் போன்றவை தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். நாங்கள் இன்று சகல வளங்களும் பெற்ற மக்களாக வாழ்கின்றோம்.
எமக்கு மாற்றம் தேவையில்லை. மாற்றத்தினை கூறி இங்கு வருபவர்கள் தங்கள் சுயநலம் கருதியே வருகின்றனர்.
சம்பந்தன் ஐயா என்ன நோக்கத்துக்காக மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கினார் என்பது யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது.
எந்தவித உடன்படிக்கையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளார். மைத்திரிபால யார் அவர்களது உறவினரா?.இவை எல்லாம் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.