வளவாய் பகுதியில் 25ற்கு மேற்பட்ட கிணறுகளில் வெடி குண்டு அபாயம் உள்ளதாக அறிவித்தல்கள் இடப்பட்ட நிலையில் இதை விவசாயத்திற்கு
பயனபடுத்த முடியாது விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் வெடி குண்டு அகற்றும் பணியில் ஈடுப்பட்டவர்களும் வெளியேறி விட்டார்கள்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே இராணுவ பாதுகாப்பு அரணுக்கு வெளியே மக்கள் பயன்பாட்டிற்கு குடியிருப்புக்கள் விடப்பட்ட போதும் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் வெடி குண்டுகள் அகற்றப்படாமையால் சில கிணறுகள் தூா்க்கப்பட்ட நிலையிலும், சில கிணறுகள் நீர் உள்ள நிலையிலும் உள்ளது.
எனினும் இப்பகுதி மக்களால் இந்த கிணறுகளை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத தூா்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.