ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.
நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார் விபூசிகா.
மாலை 4 மணியளவில் அவரது வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் விபூசிகாவின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்த விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்