உலகக் கிண்ணத் தொடரின் முடிவுகள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக " வாட்ஸ் அப் ' சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்தில் 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் நடக்கிறது. இதில் சூதாட்டக்காரர்கள் அதிகம் " விளையாடுவது ' போல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவு இவர்கள் கணிப்பின் படி சரியாக அமைந்துள்ளது. உதாரணமாக நியூஸிலாந்து அனைத்துப் போட்டிகளிலும் வென்றது.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, தென்னாபிரிக்காவிடம் தோற்குமென கூறப்பட்டது. அடுத்து சிம்பாப்வேயிடமும் தோல்வியடையும் எனக் கூறப்பட்டுள்ளது. காலிறுதியில் இந்தியா, நியூஸிலாந்தை வெல்லுமாம். அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று கிண்ணத்தை தக்க வைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29 இல் நடக்கும் இறுதியாட்டத்தில் தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து ஐ.சி.சி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது