மேற்கிந்தியாவுடனான மோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணிக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 76 ஓட்டத்தால் தோற்ற அந்த அணி நேற்று மேற்கிந்தியாவுக்கு எதிராக மிகவும் மோசமாக ஆடியது.
1 ஓட்டம் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து மோசமான வரலாற்று சாதனையை படைத்தது. 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
பாகிஸ்தான் வீரர்களின் இந்த மோசமான ஆட்டத்தால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஆத்திரமடைந்தனர்.
முல்தான் நகரில் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியின் அடையாள இறுதி ஊர்வலத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனுஸுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் நஜீம் மசூதியின் கொடும்பாவியையும் எரித்தனர்.