அரசியல் அமைப்புத் திருத்தங்களின் பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக குறையும் என்ற யோசனை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கம் இன்னும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 எனவும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும் வரையறுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதனடிப்படையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அமைச்சுக்களுக்கான துறைகள் தொடர்பான விடயங்கள் தெளிவாக உள்ளடக்கப்பட உள்ளது