புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2015

யாழ். பொலிஸார் மாறிவிட்டார்களா? - ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ!


யாழில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாழ்ப்பாணப் பொலிஸார் என்றும் இல்லாதவாறு இன்று தங்களுடைய கடமைகளை சரியாக செய்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது.
இதுபற்றித் தெரியவருவதாவது,
யாழ். நகரில் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பொலிஸார் எவ்வித தேவையற்ற தலையீடுகளிலும் ஈடுபடவில்லை.
மாறாக என்றும் இல்லாதவாறு பொறுப்புடன் வாகன போக்குவரத்தை ஒழுங்கமைத்தும் மக்களது போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தங்களுடைய பணியை மேற்கொண்டனர்.
எனினும் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் போராட்டம் எனின் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருவதும் , போராட்டக்காரர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதி மறுப்பதும் பொலிஸாரது வேலையாக இருந்து வந்தது.
மேலும் பேரணிகளுக்கு தடை விதிப்பது என அவர்களது ஜனநாயக போராட்டமும் நசுக்கப்படும் இதனால் போராட்டங்களை முழுமையாக நடாத்த முடியாது பொலிஸாரின் செயற்பாட்டினால் பாதியில் முடிவடையும்.
இருப்பினும் இன்றைய போராட்ட இடத்தில் வீதிப் போக்குவரத்து பொலிஸார் மட்டுமே நின்றிருந்தனர். இவர்களும் வீதி ஒழுங்கை கண்காணிப்பதில் ஈடுபட்டனர்.
இவர்களின் செயற்பாடு என்றும் இல்லாதவாறு பொலிஸார் செயற்பட்டமை ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ என்றும் அங்கிருந்த பலர் தெரிவித்தனர்.

ad

ad