உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் டுனெடினில் இன்றைய லீக் ஆட்டத்தில் 1996ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி, அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர் கொள்கிறது.
இதில் டொஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. முதலில் களம் இறங்கிய ஆப்கான் அணி வீரர்கள் அகமதி, மங்கல் தனது ஆட்டத்தை நிதானமாக விளையாட தொடங்கினர்.
8.1வது ஓவரில் மங்கல் 30 பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூஸ் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி தனது 9 வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
9.4 ஓவரில் அகமதி 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, ஷென்வாரி, ஸ்டானிக்ஜாய் இருவரும் ஜோடி சேர்ந்தனர், நிதானமாக விளையாடி ஓட்டங்களை உயர்த்தினர்.
ஸ்டானிக்ஜாய் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும், ஷென்வாரி 38 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து விக்கெட்டுகள் பறிபோக, 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்கள் எடுத்தது.
233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.