புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2015

கட்டாரில் 350 இலங்கை த்ப்பரவு தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பு எரிந்து நாசம்

கட்டாரின் செகெலியா என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு தொகுதி  தீக்கரையாகியுள்ளது.
அக்குடியிருப்புக்களில் கட்டாரிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களே தங்கியிருந்துள்ளார்கள்.
இதன் காரணமாக தாம் தம்முடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து, உணவு,உறைவிடமற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் முகங்கொடுத்துள்ள இந்நிலைமை குறித்து எந்த அதிகாரிகளும் கவனம் செலுத்தி, நிவாரணங்களை வழங்கவில்லை எனவும் பாதிக்கப்ட்டவர்கள் இலங்கை ஊடகமொன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதேவேளை குறித்த தீவிபத்து தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறு கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad