புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

பிரபாகரன் காணாமல்போனாரே தவிர உயிரிழக்கவில்லை என்கிறார் :அங்கயன்

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும்
ஆரவாரத்துக்கு மத்தியில் இப்படித் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான இறுதிப் பரப்புரைக் கூட்டம்  நேற்றுநல்லூர் சங்கிலியன்தோப்பில் இடம்பெற்றது.இதில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
"நான் வியாபாரமோ, விபச்சாரமோ செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே வந்தேன். அங்கஜன் என்ற இந்தத் தனி மனிதனுக்காக 10 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு எனது தந்தையார் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் நடத்திய பொதுக்கூட்டத்திலும் காணியைப் பெறுதல், சமஷ்டி ஆட்சி என்பவற்றையே கோரினர். இறுதியாக நடந்த வவுனியா கூட்டத்திலும் அவற்றையே கோருகின்றனர். 50 ஆண்டுகளாக ஒரே விடயத்தைப் பற்றியே பேசுபவர்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு உடனடியாகத் தீர்ப்பர்.
 
நாங்கள் தேசியக் கட்சி சார்ந்து நிற்பதால் எங்களைத் துரோகிகள் என்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் சார்பில் நிற்பவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமசந்திரன் எத்தனை பேரை மண்டையில் போட்டார். மண்டையன் குழு தலைவர் பல சகோதரப் படுகொலைகளை செய்தார் என்று மூத்த ஊடகவியலாளரான வித்தியாதரனே கூறியிருக்கிறார். அப்படியானால் இவர்களை என்னவென்று சொல்வது."
"எனது தேசியத் தலைவரும் பிரபாகரன்தான். அவர் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை." அங்கஜன் இவ்வாறு கூறியதும் பொதுமக்கள் கைகளைத் தட்டி பெரும் ஆரவாரம் எழுப்பினர்

ad

ad