புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

 சுசில், அநுர இருவரது கட்சி உறுப்புரிமைகளும் பறிப்பு ; ஜனாதிபதி அதிரடி 
 பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து இன்றைய தினம் நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரது கட்சி உறுப்புரிமைகளும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவினால் பறிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் இன்று வெள்ளிக்கிழமை உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக கலாநிதி விஷ்வ வர்ணகுலசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே முன்னாள் பொதுச் செயலாளர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரது உறுப்புரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் முயற்சிகளாக இவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்ட விடயம் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதங்களும் குறித்த இருவருக்கும் ஜனாதிபதியினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த கடிதங்களின் பிரதிகளும் தேர்தல்கள் ஆணையாளர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர்பீடங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad