15 ஆக., 2015

முதல் சோலார் விமானநிலைய பெருமையை பெறுகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்!

முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம் என்கிற பெருமையை அடைகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்.

முதல் கட்டமாக கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம், வருகை டெர்மினலின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி 100 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத்தை நிறுவியது கொச்சி சர்வதேச விமான நிலையம் CIAL (Cochin International Airport Limited). அதன் வெற்றிகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, பின்னர் ஒரு மெகா வாட் திறனாக மெருகேற்றப்பட்டது.

இதற்கான பேனல்களை விமான நிலைய கூரையிலும் தரையிலும் பொருத்தி இருந்தார்கள். இது கேரள மாநிலத்தில் ஒரு 'ட்ரெண்ட் செட்டராக' ஆனது. CIALஐ தொடர்ந்து தற்போது பல்வேறு துறையினரும், சூரிய சக்தியை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.