15 ஆக., 2015

இந்தியாவின் பன்முகத் தன்மையே அதன் பலம்: தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை
டெல்லி செங்கோட்டையில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் 69வது சுதந்திர தின விழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய நரேந்திர மோடி, 

இன்று உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு உதயமான நாள். சுதந்திரத்துக்காக தியாகம் செய்தவர்களை இந்த நேரத்தில் வணங்குகிறேன். 125 கோடி மக்களின் கனவுகளை பறைச் சாற்றுவது இன்றைய விடியல். இன்று நம்பிக்கையின் ஒளி நாடு முழுவதும் பரவி உள்ளது. 

அரசின் அனைத்து திட்டங்களின் நோக்கமும் ஏழைகளுக்கு உதவுவதே ஆகும். வங்கிகளின் கதவுகள் ஏழைகளுக்கு திறந்துவிடப்பட்டு உள்ளன. ஜன்தன் திட்டம்மூலம் 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 17 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது எளிதான காரியமல்ல. ஜன்தன் திட்டம் மூலம் வங்கிகளில் ஏழைகள் ரூபாய் 20 ஆணிரம் கோடி சேமித்துள்ளனர். அரசு திட்டங்கள் ஏழை மக்கள் பலனடையும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 

மக்களுக்கான தொடர்பை மத்திய அரசு அதிகரித்து உள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிரதான் மந்திரி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

நாட்டில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்காக வளர்ச்சியை தடுக்கக் கூடாது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறும். ஏழைகள் மேம்பாடு அடைந்தால் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

சமூகப் பாதுகாப்புக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொள்கைகளை யாரும் வகுக்கலாம். ஆனால் ஒரு சிலரால் தான் செயல்படுத்த முடியும். சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள மக்களை வளப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. 

தூய்மையான இந்தியா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தூய்மை இந்தியா பற்றி பேசினேன். தூய்மை இந்தியா திட்டம் நமது அரசின் மிகப்பெரிய சாதனை. தூய்மை இந்தியா திட்டம் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்கள் குழந்தைகள் தான். இரண்டு லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிவளைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்திய நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை. இந்தியாவின் பன்முகத் தன்மையை அதன் பலமாகும். இந்தியாவில் மத வாதத்திற்கும், சாதிய வெறிக்கும் இடமில்லை. ஒற்றுமை சீர்குலைந்தால் இந்தியாவின் வளர்ச்சி கனவு சீர்குலையும். ஒற்றுமையின் சின்னமாகவும், எளிமையின் அடையாளமாகவும் திகழ்கிறவர்கள் இந்தியர்கள். எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் என்றார்.