15 ஆக., 2015

ணில் மீண்டும் பிரதமரானால் சமஷ்டிக்கு அப்பாலானவை வழங்கப்பட்டுவிடும் ; விமல்


 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக்குவந்தால் சமஷ்டியை மட்டமல்ல அதற்கு அப்பாற்சென்ற தீர்வுகளையும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாளத்திற்கு
நடனமாடும் அரசாங்கத்தையே உருவாக்குவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உயைாற்றுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டால் சமஷ்டி மட்டுமல்ல, அதற்கு அப்பாலானவைகளை வழங்குவார். ஏனென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாளத்திற்கு நடனமாடும் ஓர் அரசாங்கத்தை அமைப்பதே ரணில் விக்கிரமசிங்கவின் தேவை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவையான அரசாங்கத்தை உருவாக்குவதென்பது ஆயிரக்கணக்காக இராணுவப் படையினரின் உயிர்களைத் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கும், இனவாதத்திற்கும் பலிகொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு நிறுத்த முடியாது.
பலாலியில் ஏக்கர் கணக்கிலான காணிகளை விடுவித்தபோது சம்பிக்க எங்கே இருந்தார்? சம்பூரில் கடற்படை முகாமை அகற்றியபோது சம்பிக்க வாய் திறந்தாரா?
அதேபோன்று வடக்கில் இராணுவ முகாம்களையும், அரண்களையும் அகற்றியபோது அவர் குரல் கொடுத்தாரா?

எனவே பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிரிவினைவாதத்தை தடுத்துநிறுத்த முடியாதென்பது கடந்த 6 மாதங்களில் நிரூபனமாகிவிட்ட