புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

சுவிஸ் சமஸ்டி அரசு தலைவர் சிமோநெட்டா சிறிலங்கா தரப்பையும் தமிழர் தரப்பையும் தனித்தனியாக சந்தித்தார்.

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசின் ஜனாதிபதியும் நீதியமைச்சருமான திருமதி சிமோநெட்டா அவர்கள் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார
அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா அரசதரப்பு பிரதிநிதிகளை சந்தித்தார்.
ஜெனிவாவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடன் கூடிய நிரந்தர தீர்வை நோக்கி சிறிலங்கா செல்ல வேண்டும் என சுவிஸ் ஜனாதிபதி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தை போன்று மொழிவாரியான மாநில சமஷ்டி ஆட்சி முறையின் மூலம் இதற்கு தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் புதிய அரசு நல்லிணக்கம் சமாதானத்தை நோக்கியே நகர்வதாக இச்சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார் என ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதகரம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று இரவு தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினரை சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி சந்தித்தார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுவிஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

ad

ad