புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினது மத்தியகுழு தீர்மானங்கள்.


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மத்தியகுழு
கூட்டம் கட்சியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் 12.09.2015 அன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திரு.சுரேஸ் க.பிரேமச்சந்திரன் உள்ளிட்ட முப்பத்திரண்டு மத்தியகுழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இம் மத்தியக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:
01. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மிக நீண்ட காலமாக கூட்டப்படாதிருப்பதுடன் நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலின் பின்பு பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும், ஐ.நா சபையினுடைய மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கையினுடைய யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிடப்படக்கூடிய சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது ஒருங்கிணைப்புக்குழுவைக் கூட்டி மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென இம் மத்தியகுழு வலியுறுத்துகின்றது.
02. சகல பேச்சுவார்த்தைகளிலும், பொதுநடவடிக்கைகளிலும், முக்கிய சந்திப்புக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சித் தலைவர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், இம் மத்தியகுழு வலியுறுத்துவதுடன், தமிழரசுக்கட்சி தனித்து எடுக்கும் முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் ஆகாது என்பதையும் இம்மத்தியகுழு வலியுறுத்துகின்றது.
03. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பிற்கான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதென்பதுவும், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பது என்பதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்சபையான ஒருங்கிணைப்புக்குழுவிலேயே எடுக்கப்பட வேண்டும் என்பதையும் இம் மத்தியகுழு வலியுறுத்துகின்றது.
04. யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றின் தலைவர்களும், அக்கட்சிகள் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஐ.நா சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிக்கையிட்டதை இம்மத்தியகுழு வரவேற்பதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பிரேரணையை மாகாணசபையில் நிறைவேற்றியமைக்கும் இம்மத்தியகுழு தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
05. வடக்கு மாகாணசபையினுடைய முதலமைச்சராக பதவி வகிக்கும் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டாரே தவிர, இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்த வேட்பாளராக அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்துவதுடன், அவர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் அனைத்தும் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, இலங்கை தமிழரசுக்கட்சி தனித்து அவர் தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததும், அனுமதிக்க முடியாதததுமாகும் என்பதையும் இம்மத்தியகுழு வலியுறுத்துவதுடன், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பந்தமாகவும், சர்வதேச விசாரணை தொடர்பாகவும் முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்காக இம்மத்தியகுழு நன்றி பாராட்டி வாழ்த்துகின்றது.
ந.சிவசக்தி ஆனந்தன்
செயலாளர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமை

ad

ad