புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

கிண்ணம் வல்வை இளங்கதிர் வசம்


890000
பரபரப்பான ஆட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை தனதாக் கியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் .

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் கின் அனுமதியுடன் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரி சளிப்பு விழாவும் நேற்று முன்தினம் கழக மைதானத்தில் இடம்பெற்றன.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை றெயின் போய்ஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை இளங்கதிர் விளை யாட்டுக்கழகமும் மோதின. மிகவும் பரபரப்பாக ஆரம்பமான இவ்வாட் டத்தின் முதல் பாதியில் இரு அணி யினரும் ஒருவருக்கொருவர் சளைத் தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக் கும் வகையில் முட்டி மோதினர். இதனால் இரு அணியாலும் இலகு வில் கோல் போடமுடியவல்லை .
இச்சூழ்நிலையில் இடைவேளைக் காக ஆட்டம் இடைநிறுத்துவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது இளங்கதிர் அணியின் முன்கள வீரர் பிரசாந்த் அற்புதமான கோல் ஒன் றைப் போட்டு தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இடைவேளையின் பின் ஆட்டம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம் பெற்ற போதும் ஆட்டத்தின் 14 ஆவது மற்றும் 20 ஆவது நிமிடங்களில் இளங்கதிர் அணியின் மற்றொரு வீரன் ஜெகதாஸ் இரு கோல்களைப் போட்டு அசத்த வெற்றிக் காற்று இளங்கதிர்ப் பக்கமாக வீசத்தொடங்கியது.
இறுதியில் றெயின்போய்ஸ் அணியினர்கோல் போடுவதற்க்கு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைய 3:0 என்ற கோல் கணக் கில் வென்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கோண்டது இளங்கதிர் அணி.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இளங்கதிர் அணியைச் சேர்ந்த பிரசாத்தும் தொடர்ஆட்ட நாயகனாக அதே அணியைச் சேர்ந்த ஜெய தாஸும் சிறந்த பேற்றுக் காப்பாளராக விஜிதரனும் தெரிவு செய்யப் பட்டனர்.

ad

ad