புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

மதிமுகவிலிருந்து ஏன் விலகினேன்? : மாசிலாமணி விளக்கம்



மதிமுக நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், குமரி விஜயகுமார், பாலவாக்கம் சோமு ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது மதிமுக பொருளாளர் மாசிலாமணியும் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

மதிமுகவின் பொருளாளர் மாசிலாமணி அப்பொருப்பிலிருந்து விலகுவதாக திண்டிவனத்தில் அறிவித்தார்.   மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அவர் அறி வித்தார்.  

திமுகவிலிருந்து வைகோவுடன் பிரிந்துசென்றவர்களில் முக்கியமானவர் மாசிலாமணி.  கடந்த 22 ஆண்டுகாலம் வைகோவுடன் இருந்தவர் ஏன் அக்கட்சியை விலக்கினார்?

’’இது என்னுடைய தனிப்பட்ட முடிவு.  என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.  எடுத்த இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன்.  மீண்டும் மதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை.  கட்சி தலைமை பேச்சுவார்த்தைக்கு என்னை அழைக்காது.  அப்படி அழைத்தாலும் நான் போகப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன்.

22 ஆண்டுகாலம் வைகோவோடு எந்த வித எதிர்ப்பாப்பும் இல்லாமல் கட்சிப்பணியாற்றினேன்.   
தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுக தலைமை எடுத்த முடிவு அதிருப்தியளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கூட்டணி கோரிக்கை வைத்தோம்.  ஆனால், தலைமையின் கூட்டணி குறித்த முடிவு எனக்கு அதிருப்தி அளித்தது.   அதனால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளேன்.    நான் மட்டும் தான் கட்சியில் இருந்து விலகியுள்ளேன்.  என்னுடன் வாருங்க என்று எவரையும் அழைக்கப்போவதில்லை’’ என்று மாசிலாமாணி தெரிவித்தார்.

ad

ad