புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: கடைசி நேர பரபரப்பு




புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியின் நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். 

இந்த நிலையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் கோகுலகிருஷ்ணன் அதிமுக சார்பில் கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி, தமிழக அமைச்சர்கள் காமராஜ், சம்பத் மற்றும் இரு கட்சிகளின் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். கோகுலகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வார். அவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. அவர் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற்றுத் தருவதிலும் அக்கறை எடுத்துக்கொள்வார் என்றார். 

மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று வரை அரசியல் கட்சி சார்பில் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அதிமுக வேட்பாளர் கோகுலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. 

புதுச்சேரி சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும். இதில், முதல்வர் ரங்கசாமியின் கட்சிக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். சிவக்குமார் என்ற சுயேட்சை உறுப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 5 உறுப்பினர்களும், திமுகவுக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர். அதனால் ரங்கசாமி கட்சி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் உள்ளது. வேட்பாளர் நிறுத்துவதில் 6 எம்எல்ஏக்கள் பிடிவாதம் பிடித்து வந்தால் வேட்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து வந்தது என்.ஆர்.காங்கிரஸ். 

இந்தநிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் கலந்து கொண்டனர். அதில், தனது நண்பரும், தொழிலதிபருமான கோகுலகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்த ரங்கசாமி விரும்பினார். ஆனால் இதற்கு அதிமுக ஒப்புதல் அளிக்கவில்லை. இறுதியில் கோகுலகிருஷ்ணன் அதிமுக வேட்பாளராக போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இதையடுதது உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லய்பட்ட கோகுலகிருஷ்ணன் தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் முறைப்படி அதிமுக உறுப்பினராக இணைந்தார். இதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளராக கோகுலகிருஷ்ணனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். 

ad

ad