புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

கனடிய பொலிசாரை திணற வைத்த வங்கி கொள்ளைக்காரன்: அதிரடியாக கைது செய்த சுவிஸ் பொலிசார்



கனடாவில் சுமார் 20 வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு பொலிசாரின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி வந்த கில்லாடி கொள்ளைக்காரனை சுவிஸ் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜெஃபெரி ஜேம்ஸ் ஷுமன் (53) என பெயரிடப்பட்டிருந்தாலும், வங்கிகளில் பணத்தை கொள்ளையிட்டு அறைக்கு அறை தாவி குதித்து தப்பி ஓடுவதால் ‘வால்டர் பண்டிட்’ என பொலிசாரின் மத்தியில் அழைக்கப்பட்டு வந்துள்ளான்.
கனடா நாட்டில் கடந்த 5 வருடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில் கொள்ளையிட்டு பொலிசாருக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்துள்ளான்.
ஜெஃபெரிக்கு பிரான்ஸ் மட்டும் அமெரிக்க நாடுகளில் குடியுரிமை உள்ளதால், அவனை பிடிக்க சர்வதேச பிணை ஆணையை கனடிய பொலிசார் வெளியிட்டுருந்தனர்.
மேலும், அந்த கொள்ளையனால் வங்கிகளுக்கு லட்சக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெஃபெரி குறித்து தகவல் அளிப்பவருக்கு ஒரு லட்சம் டொலர் பரிசு வழங்கப்படும் என கனடா நாட்டு வங்கிகள் நலச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால், கொள்ளையன் எங்கு தலைமறைவாக இருக்கிறான் என்ற தகவல் கனடிய பொலிசாருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், சுவிஸின் ஜெனிவா நகர பொலிசார் ஜெஃபெரியை கைது செய்துள்ளதாக அதிரடியாக நேற்று முன் தினம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், சுவிஸில் எந்த இடத்தில் எப்படி கொள்ளையன் கைது செய்யப்பட்டான் என்ற தகவலை ஜெனிவா பொலிசார் வெளியிடவில்லை.
கனடா நாட்டு பொலிசாரிடமிருந்த தகவல் கிடைக்கப்பெற்றவுடன் அந்நாட்டிற்கு விரைவில் நாடு கடத்தப்படுவான்.
மேலும், ஜெஃபெரியின் குற்றங்களுக்கு அவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad