புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் இருவரும் ஜெனீவா பயணம்.


சர்வதேச விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கையொப்பம் பெறும் போராட்டங்கள் தொடர்பாக ஜெனீவாவில் அவர் விளக்கமளிப்பார் என்றும் பெறப்பட்ட கையொப்பங்களை மகஜராக கையளிப்பார் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தகவல்கள் கூறுகின்றன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவிற்கு செல்லவுள்ளார்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாண ஆயர்கள் மகஜர் ஒன்றை ஜெனீவா மனித உரிமைச்சபைக்கு அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad