புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். மண்ணில்!

இந்தியாவின் 67ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழ். இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியினை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் இங்கு யாழ். இந்திய துணைத் தூதுவரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த இந்திய துணைத்துவாதுவர்,
இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் இடையில் ஒரு சினேகபூர்வமான ஒற்றுமை இருந்து வருகின்றது. அவற்றின் பிரதிபலிப்பின் ஊடாக வடமாகாணம் புத்துயிர் பெற்று வருகின்றது. அயல் நாடு என்ற நோக்குடன் இரு நாடுகளுக்கிடைய காணப்படுகின்ற ஒற்றுமை எமக்கு தேவையாகயுள்ளது என தெரிவித்தார்.

அதேபோன்று இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ad

ad