சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வர விரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ளமாட்டோம் என்று திருவாரூரில்
அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
2 நாள் பயணம்
தி.மு.க. தலைவரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாநிதி, 2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க சென்றுள்ள அவர், திருவாரூர் அருகேயுள்ள காட்டூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
அரசின் செயல்பாடு
கேள்வி:- கடந்த 4¾ ஆண்டு கால தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?.
பதில்:- சொல்லக் கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை.
கேள்வி:- விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவிகள் இறந்தது பற்றி நீதி விசாரணை வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த அளவுக்கு தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறீர்கள்?.
பதில்:- தமிழக அரசைப் பொறுத்தவரையில் இதேபோன்ற கொலைகள் தமிழகத்திலே நடைபெற்றிருந்தாலும் கூட, அதைப்பற்றி கவலைப்பட்ட அரசு அல்ல.
தேர்தல் அறிக்கை
கேள்வி:- 2016-ம் ஆண்டு தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதை மையப்படுத்தியிருக்கும்?.
பதில்:- ஜனநாயகத்தை மையப்படுத்தி இருக்கும்.
கேள்வி:- தேர்தல் அறிக்கையில் மின் கட்டணக் குறைப்பு இருக்குமா?.
பதில்:- தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் என்று இப்போது வெளியிடுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். விரைவில் வெளியிடப்படவிருக்கின்ற தேர்தல் அறிக்கையில் அதைப்பற்றி விளக்கமாகச் சொல்லப்படும்.
கேள்வி:- வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைவது சாத்தியமா?.
பதில்:- கூட்டணி வெறுக்கத்தக்க ஒன்று அல்ல. கூட்டணி வரவேற்கத் தகுந்த ஒன்று. கூட்டணிக்கு வரவிரும்புகின்ற கட்சிகளை உதறித் தள்ளமாட்டோம். எந்தக் கட்சியானாலும் ஜனநாயகத்திற்கு வெற்றித் தேடித் தருமேயானால், அந்தக் கட்சிகளை தாராளமாக நாங்கள் வரவேற்போம்.
திருவாரூர் தொகுதியில் போட்டியா?
கேள்வி:- கரு அறைக்குள் முதல்-அமைச்சர் படத்தை வைத்து பூஜை செய்திருக்கிறார்களே; அதைப்பற்றி?.
பதில்:- தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைக்கு ஒரு அளவு இல்லை என்பதற்கு இது ஒரு அடையாளம்.
கேள்வி:- மீண்டும் நீங்கள் திருவாரூரில் போட்டியிடுவீர்களா?.
பதில்:- திருவாரூர் மக்கள் சொன்னால், கட்சி அனுமதித்தால், போட்டியிடுவேன்.
கேள்வி:- சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?.
பதில்:- வெற்றி வாய்ப்பு நன்றாகத் தான் இருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.