புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

போலி பேஸ்புக் மூலம் பலரிடம் பணம் பறிப்பு: சந்தேகநபருக்கு வலைவீச்சு

போலியான பேஸ்புக்கின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வரும் போதோ கைது செய்யப்படவேண்டும் என்று, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு, நீதவான் பணித்துள்ளார்.
பெண் என்று குறிப்பிட்டு போலியான பேஸ்புக் கணக்கை கொண்டு பல பணக்காரர்களுடன் நண்பர்களாகி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து பணம் பறித்து வந்த நபரை கைது செய்வதற்கே உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாறி மாறி இருந்துகொண்டு குறித்த முகநூலை இயக்கி வருகின்றமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad