புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

ஞானசார தேரர் கைது விவகாரம்.. ஹோமாகம நீதிமன்றம் அருகில் கடும் பதற்றம்! கலகம் அடக்கும் பொலிசாரும் குவிப்பு!


கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வை
க்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஹோமாகம நீதிமன்ற வளாகத்தை அண்டிய பகுதிகளில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானசார தேரரை விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை பேரூந்து வருகை தந்திருந்த நிலையில் அதனை வெளிச்செல்ல விடாமல் பௌத்த பிக்குகள் சிலர் அதன் அடியில் சக்கரங்களின் முன்பாக படுத்துக் கொண்டுள்ளனர்.
இன்னும் சில பிக்குமார் நீதிமன்ற நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில் மதில் வழியாக ஏறிக் குதித்து, தங்களையும் கைது செய்யுமாறு நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூச்சல் இட்டுள்ளனர்.
மேலும் சில பிக்குமாரும், பொதுமக்களும் இணைந்து சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பிக்கு ஒருவர் மயக்கமுற்றதைத் தொடர்ந்து பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது. அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பிக்குமாரின் ஆவேசம் கலந்த நடவடிக்கைகள் காரணமாக இன்று மதிய நேரத்துடன் ஹோமாகம நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ளும் வகையில் அயல் பிரதேசங்களில் இருந்து 300க்கும் அதிகமான பொலிசார் நீதிமன்ற பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டிகளுடன் கலகம் அடக்கும் பொலிசாரும் ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad