புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

மின்சாரம்தாக்கி பலியான 16 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம்: ஜெ., உத்தரவு



முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’மதுரை மாவட்டம், கோச்சடை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ; திருவள்ளூர் மாவட்டம் பாடியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி முத்து லட்சுமி; நாகப்பட்டினம் மாவட்டம், ராதாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் என்பவரின் மனைவி சிவகாமி; வேலூர் மாவட்டம், கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் தாட்சாயிணி; சிவகங்கை மாவட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்; சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணுப்பையன்;

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தங்கமணி; வேலூர் நகரம், ஓ.எம்.சி. தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சந்தியா; சிவகங்கை மாவட்டம், வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்; திண்டுக்கல் மாவட்டம், பச்சமலையான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவரின் மனைவி முருகேஸ்வரி; திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்; தருமபுரி மாவட்டம், பொம்மஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் மகள் சத்யா, குமரேசன் என்பவரின் மனைவி காளம்மாள்; சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி; காஞ்சிபுரம் மாவட்டம், தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லன்; மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ராகுல்; ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

திருவண்ணாமலை மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன், பழனி; திருநெல்வேலி மாவட்டம், வேலப்பநாடாரூர் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகள் சிவரஞ்சனி; சேலம் மாவட்டம், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன்; விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்த அந்தோணி; திருநெல்வேலி மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ்; சென்னை, நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த சாமுவேல்; ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.

மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த இந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’’என்று கூறியுள்ளார்.

ad

ad