புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

வேலையில்லாப் பட்டதாரிகள் மீது தாக்குதல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானம்

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குமாறு கோரி, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ​மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நாளை இது தொடர்பில் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக, அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்மிக முணசிங்க குறிப்பிட்டுள்ளார். சுமார் 32‍,000 பேர் வரையான வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு வேலை பெற்றுத் தருமாறு கோரி, நேற்று முன்தினம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு பேரணி ஒன்றிணை முன்னெடுத்தனர். 

இதனயைடுத்து லோட்டஸ்ட் வீதியில் வைத்து குறித்த பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. போராட்டக்காரர்களின் நோக்கம் தமது கோரிக்கைகளை பிரதமரிடம் ஒப்படைப்பதே. எனினும் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை களைத்தனர். அவர்கள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தம்மிக முணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

ad

ad