புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

ஆதாரங்கள் பலமாக இருக்கிறது; உம்மன்சாண்டி பதவியில் இருந்து விலகுவது உறுதி: சரிதா நாயர்



சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் பலமாக இருப்பதால் கேரளா முதலமைச்சர் உம்மன்சாண்டி பதவியில் இருந்து நிச்சயம் விலகுவது உறுதி என்று சோலார் பேனல் மோசடி தொடர்பாக கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரள நடிகையும், சோலார் பேனல் அமைத்துத்தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக கைதானவருமான சரிதா நாயர் கோவையில் காற்றலை மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரானார். வடவள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் காற்றலை அமைத்துத்தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சரிதா நாயர் ஆஜாரானர். வழக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி ஒத்திவைக்க நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை கொச்சின் சோலார் மோசடி தொடர்பான நீதி விசாரணை ஆணையத்திடம் கடந்த வாரம் ஒப்படைத்துவிட்டதாக தெரிவித்தார்.  தன்னுடைய ஆதாரங்கள் பலமாக உள்ளதாகவும், நீதி விசாரணை ஆணையத்தில் முறையான விசாரனை நடைபெற்றாலே முதலமைச்சர் பதவியில் இருந்து உம்மண்சாண்டி விலகுவது உறுதி என தெரிவித்தார்.

 மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பல்வேறு தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துகொண்டு இருப்பதாகவும், கேரளா காவல்துறையினரின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தனக்கு பாதுகாப்பு கோரவில்லை என சரிதா குற்றம்சாட்டினார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தூண்டுதலில் பேரில் உம்மன்சாண்டி மீது புகார் கூறவில்லை என கூறிய அவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உம்மன்சாண்டி குறித்த தகவலை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று தன்னை நேரில் தொடர்பு கொண்டு வற்புறுத்துவதாக தெரிவித்த சரிதா நாயர், மக்கள் தன் முதலமைச்சர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவே ஆதாரங்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார். 

சோலார் பேனல் அமைப்பதற்காக முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முஹம்மது ஆகியோரின் உதவியாளருக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக நீதிபதி முன்னிலையில் சரிதா நாயர் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad