புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல்மயமாக்கும் வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு


நாடு முழுவதும் கிராமங்கள் நீங்கலாக அனைத்து பகுதிகளிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு 2015ம் ஆண்டு டிசம்பர் 31–ந் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அதற்குள் கேபிள் டிவி நிறுவனங்கள் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேபிள் டிவி ஒளிபரப்பில் பழைய நிலையே தொடரவேண்டும் என்று கூறிய உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மத்திய அரசின் உத்தரவு மீதான இடைக்கால தடை நீடிக்கும் என்று தெரிவித்தது. பின்னர் இவ்வழக்கின் விசாரணை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad