புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

திமுக மேடைகளில் பிரசாரம் செய்வதில் தயக்கமில்லை: நடிகை குஷ்பு [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 05:38.12 AM GMT +05:30 ] திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகியிருப்பதால், திமுக மேடைகளில் பிரசாரம் செய்வேன் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். திமுக-வில் இருந்த நடிகை குஷ்பு, அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று குஷ்புவிடம் நிருபர்கள், திமுக-வில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்த நீங்கள் திமுக-வுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த குஷ்பு, நான் திமுக-வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளது அனைவருக்கும் தெரியும். திமுக-வில் இருந்து வெளியே வந்த போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. தலைவர் கருணாநிதி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, கட்சியிலிருந்து நானாக தான் வெளியேறினேன். தற்போது கூட்டணி உருவாகியிருப்பதால் ஒரே மேடையில் பிரசாரம் செய்வேன், எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சி மேலிடம் கூறினால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என்றும், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு ஐநூறு சதுர அடியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளன.
தற்போதைக்கு சேரிப்புற குடியிருப்புகள் காரணமாக நகரின் அழகு கெடுவதுடன், வர்த்தக ரீதியில் பெறுமதியான அரச காணிகள் அநியாயமாக முடக்கப்பட்டுள்ளன.
எனவே, சேரிப்புறங்களில் குடியிருப்போரை அங்கிருந்து அகற்றி அவர்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகளை பெற்றுக் கொள்வதும் இலகுவாக இருக்கும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ad

ad