புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மாணவர்- ஆசிரியை பிடிபட்டனர்!


தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சியில் உள்ள தனியார்பள்ளியில் பணியாற்றி வந்த கோதைலட்சுமி என்ற ஆசிரியை, அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவசுந்தர பாண்டியனுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி மாயமானார். 

மாணவண் சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை கோதைலட்சுமி (29) என்பவர் கடத்திச் சென்றுள்ளார். அவரால் என் மகனின் உயிருக்கு ஆபத்துள்ளது' எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.

மாயமான ஆசிரியையும் மாணவனையும் புளியங்குடி டி.எஸ்.பி. தலமையில் போலிசார் கடந்த ஓராண்டாக தேடிவந்தனர் ஆனாலும் அவர்கள் இருக்கும் இடம் மாயமாகவே இருந்து வந்தது. 

இந்த சூழ்நிலையில், ஆசிரியை கோதையும், அந்த மாணவரையும் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை- மாணவர் ஆகியோரை, 11 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் திருப்பூரில் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.


நெல்லை மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தர் (16) என்ற மாணவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் சுந்தரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை கோதை லட்சுமியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் மாணவனின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஆசிரியையை கண்டித்ததோடு, மகனுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, மாணவர் சுந்தர் எழுதினார். கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வை அவசரம் அவசரமாக எழுதிய சுந்தர், ஆசிரியை கோதை லட்சுமியுடன்  ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதில், தனது மகனை ஆசை வார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்றுவிட்டதாகவும், வீட்டில் இருந்த 60 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறி இருந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காதல் ஜோடிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆசிரியை கோதையையும், மாணவர் சுந்தரையும் காவல்துறையினர் இன்று பிடித்துள்ளனர். அவர்களை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதன்மூலம் ஆசிரியை கோதை- மாணவர் சுந்தர் ஆகியோரின் 11 மாத தலைமறைவு வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ad

ad