11 மார்., 2016

முகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம்! சொந்த இடத்தில் வாழவிடு

எமக்கு முகாம் வாழ்வு வேண்டாம். சொந்த இடத்தில் எம்மை வாழவிடு. என வலியுறுத்தி வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மல்லாகம் நீதவான் முகாமில் இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 25  வருடங்களுக்கு மேலாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி வருகின்றனர்.

இதுவரை அந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அந்நிலையில் கடந்த வாரம் தாம் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் இடங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்..

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் இரண்டாவது வெள்ளிக்கிழமை தமது போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் 32 நல்ன்புரி முகாம்களிலும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சுழற்சி முறையில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.