11 மார்., 2016

சிறைவாழ்வு தான் தமிழருக்கு தலைவிதியா?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, சிறை வாழ்வுதான் தமிழருக்கு தலைவிதியா?, பதவிக்கு வரும்வரை வாக்குறுதி வந்த பின் மௌனம் ஏன்?, அரசியல் கைதிகளுக்கு மரணம் தான் தீர்வா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்தனர்.