11 மார்., 2016

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த தே.மு.தி.க. மகளிரணி மாநாட்டில், வரும் சட்டமன்றத் தேர்தலில்
தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து பேச்சை நிறைவு செய்தார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, கேப்டன் அறிவிப்பால் கடந்த 3 மாதமாக இருந்த அலை முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தமிழக அரசியல் விறுவிறுப்படையும். அந்தந்த கட்சிகள் அறிவிப்பை வெளியிடுவார்கள். 

தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு என்னுடைய உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். 7 பேர் குழுவினர் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் எங்களது 7 பேர் குழுவினருடன் பேசலாம் என்றா