புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2016

விஜயகாந்த் அறிவிப்பு - கூட்டணிக்கு அழைத்தவர்கள், அழைக்காதவர்கள் மனநிலை இப்படிதானோ?

மிழக சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி விஜயகாந்த் அறிவித்தது கூட்டணிக்கு அழைத்த
கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்,   திமுக, அதிமுகவுடன் சேராததால் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்தது விஜயகாந்த்தின் தேமுதிக. தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருந்தது. தற்போது, தனித்துப் போட்டியிட போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘தனித்து போட்டியிடுவோம் என்று சொன்னது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். தி.மு.க. கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அவரவர் பலத்தை தனித்தனியாக நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையே. எங்களை பொறுத்தவரையில், கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே. இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது. ஆனால் பா.ஜ.க. முழு பலத்தோடு, ஒரு நேர்மையான கட்சியாக, வளர்ச்சியை முன்னிறுத்தும் கட்சியாக, பல மாநிலங்களில் நிரூபித்த நல்லாட்சியை, மத்தியில் நிரூபித்த நல்லாட்சியை, தமிழகத்திலும் நிறுவ வேண்டும் என்ற எங்களது நம்பிக்கை நிறைவேறும்" என்றார்.

திமுக, அதிமுகவுடனும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று அறிவித்ததோடு, அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் களமிறக்கிவிட்டது பாமக. . அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்த்தின் அறிவிப்பு குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறுகையில், "தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன்தான் கூட்டணி; வேறு யாருடனும் கிடையாது என்று கூறியது. ஆனால் பின்னர் கூட்டணி வைத்தனர். உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறிவிட்டு,  பின்னர் பா. ஜனதாவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தார். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பாரா என்பதுதான் எனது கேள்வி" என்றார்.

மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே தங்கள் கூட்டணிக்கு வரும்படி அதன் தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர்களிடம் பிடிகொடுக்காமல் நழுவினார் விஜயகாந்த். ஆனாலும், விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்குதான் வருவார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கூறி வந்த நிலையில், விஜயகாந்தின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு அவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், "தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க.வுடன் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி அமைத்துவிட்டார் என்றும், இத்தனை இடங்கள் உறுதியாகி விட்டது என்றும், உள்ளாட்சி தேர்தல் வரை பேசி முடித்து விடப்பட்டது என்றும், அவருடைய கண்ணியத்துக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பெரும் தொகை எல்லாம் பேசப்பட்டு விட்டது என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன என்றும் பல நாட்களாக ஊடகங்களிலும், ஏடுகளிலும் ஒரு நச்சு பிரசாரம் தே.மு.தி.க. மீது ஏவி விடப்பட்டது. அதன் பின்னணி யார் என்பதை இப்போது நான் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த பொய் பிரசாரம் அத்தனையையும் மகளிர் மாநாட்டு உரை மூலம் தவிடு பொடியாக்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக அரசியலில் அ.தி.முக. மற்றும் தி.மு.க. இரண்டையும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்ற தே.மு.தி.க. நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமாகா என்ற தனி கட்சியை தொடங்கியுள்ள ஜி.கே.வாசனுக்கு இந்த சட்டப்பேரவை தேர்தல் ஒரு சவால் என்றே கூறலாம். திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக கூட்டணி வைத்துவிட்டது. அதிமுகவுடன் கூட்டணி சேர முடியாத நிலையில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைத்து விட்டனர். தற்போது விஜயகாந்த்தின் அறிவிப்பு,  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தேமுதிகவின் தனித்து போட்டி அறிவிப்பு கூறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், "தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார். எந்த இயக்கத்துக்கும் ஒரு அரசியல் முடிவினை எடுப்பதற்கு முழு அதிகாரம் உண்டு. அந்த வகையில் விஜயகாந்தின் முடிவு அமைந்து இருக்கிறது. மேலும் மிக முக்கியமாக யூகங்களும், வதந்திகளும் உண்மை ஆகாது என்பதற்கு இந்த முடிவு எடுத்துக்காட்டு ஆகும்" என்று கூறினார்.

நீங்கள் விஜயகாந்த் அணியில் சேருவீர்களா? என்று ஜி.கே.வாசனிடம் கேட்டதற்கு, ‘த.மா.கா.வின் கூட்டணி குறித்து மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு அறிவிப்பேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தற்போது அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று பதிலளித்தார்.

ad

ad